Tuesday, May 21, 2019

முறிவு

கருத்தொற்றுமை இல்லாதாரோடு பயணித்தல் பெருங்கடினம்

Friday, April 19, 2019

இயல்பானது, இயற்கையானது...

எப்போது, எவருடன் நிகழுமென யாரறிவார்...? இயல்பானதும், இயற்கையானதுமே... காதல்.

https://www.youtube.com/watch?v=VWU51Q2n3h4

Thursday, April 11, 2019

கன்னித்தீவு

காட்சி 1:
நிழற்படம் மூலம் முதல் சந்திப்பு; கண்கள்தான் முதன்மையாக ஈர்த்தன. இரண்டாவது பிசிரில்லாத, தெளிந்த முகம். இறுதியாகப் அந்தச்சிரிப்பும், நிறமும்.

காட்சி 2:  
நெடுநாட்களுக்குப்பின்... தொலைவில் நாம் கண்டுகொள்கின்றோம்; ஒருநொடிப் பொழுதுதான் - அதோடு சரி.

காட்சி 3:  
மற்றொரு நாள்... நண்பகல் உணவுவேளை, எனக்கெதிர் மேசையில் நீ. நம் முதல் பேச்சு; உன் நண்பனை அழைக்க என்னிடம் தயக்கத்தோடு கோருகிறாய், அவர் பெயரை உன்னிடம் ஒருமுறை உறுதிசெய்துகொண்டு, அவரை அழைத்தேன். ஒருநிமிடப் பொழுதுதான் - அதோடு சரி.

காட்சி 4:  
மீண்டும் நெடுநாட்கள் இடைவெளி... இம்முறை அலுவல் தொடர்பாக; மின்னஞ்சல் ஊடாக. எனவே நொடிகளோ நிமிடங்களோ தேவைப்படவில்லை.

காட்சி 5:  
அவ்வப்போது தொலைவில் தென்படுவாய் - அதோடு சரி.

காட்சி 6:  
இதுவரை நான் இவற்றையெல்லாம் நினைவுகூர்ந்ததில்லை. மிகச்சில நாட்களாக, அருகருகே எதிர்ப்பட நேர்கின்றது; சிற்சில நொடிப் பார்வைகள்தாம், ஆனால் தீர்க்கமானவை. இதுவே தொடர, என் மனம் முன்நகர, அனைத்தையும் அசைபோடுகின்றேன்.

காட்சி 7 & 8:  
அடுத்தகட்ட நகர்வாக, பேச முயன்றேன்; உடலும், மனமும் உதற ஒருவழியாக வென்றேன். இருமுறை; அலுவல் தொடர்பாக - அதோடு சரி.

காட்சி 9 & 10:  
மிகச்சில நாட்களாக, அருகருகே எதிர்ப்பட நேர்ந்தது. இருமுறை; புன்னகைத்துக்கொண்டோம் - அதோடு சரி.

காட்சி 11:
சந்திக்காமலேயே சில நாட்கள் கழிந்தன; தற்போது பேச வாய்ப்பதில்லை. தொலைவிலேயே தென்படுவதால் புன்னகைக்கவும் வாய்ப்பதில்லை. கண்டும் கதைக்க இயலவில்லை எனும்போது கனக்கிறது இதயம். இந்நிலை மாறுமா? ஏதேனும் நிகழுமா? அல்லது இதுவே தொடருமா?

Friday, February 22, 2019

வீச்சு

நம் இருவரின் எதிர்பாராத பார்வைக்கு, ஒருநொடி நின்று இயங்கும் என் மூச்சு.




மனம்

என்னை முந்திப்போகும் ஒவ்வொரு ஸ்கூட்டரிலும் நீயே  இருக்கவேண்டுமெனப் படபடக்கிறது மனம்.

கானல்

உன்னைத் தேடும்போது, தொலைவில் நிற்கும் சில ஆண்களின் முகம்கூட உனதாகவே தெரிகிறது.