Friday, November 23, 2012

நாளொரு மேனி

காதல் வேண்டி விண்ணப்பித்தேன். மறுப்பே விடையாகப் பெற்றேன்.
மெல்ல என்னைத் தேற்றிக்கொண்டு, விலகியே நின்றேன்.
நட்பெனத் தொடர வேண்டி  மீள வந்தது விண்ணப்பம்.
ஒப்புக்கொண்டு, உண்மையோடிருக்க உறுதிபூண்டேன்.
விலகியிருந்தபோது இருந்த அமைதியை மறுசுழற்சியின்போது தொலைத்துவிட்டேன்.

Friday, October 19, 2012

ஓவியர் டிராட்ஸ்கி மருது

வாளோர் ஆடும் அமலை - தமிழ் மன்னர்களைப்பற்றிய குறிப்புகளும், ஓவியங்களும்.
http://www.panuval.com/index.php?route=product/product&product_id=49

தவிப்பில் நான்


அண்மை வீட்டுக் குழந்தைக்கு முத்தம்;
இருக்கை தரும் சக பயணிக்கு நன்றி;
தினம் பார்க்கும் நடத்துனருக்குப் புன்னகை;
உடன் பணிபுரிவோருக்கு அரட்டை;
என அவரவர்க்கு அதனதனைத் தந்துவிடும் மகிழ்ச்சியில் நீ.
இவர்களுள் ஒருவராக நானும் அடங்கிவிடுவேனோ என்ற தவிப்பில் நான்.

Tuesday, January 10, 2012

பொங்கல்




கொண்டாடத் தேவையான பெரும்பான்மைக் காரணங்களைத் தொலைத்து நிற்கிறது தமிழனுக்கென்று எஞ்சியிருக்கும் இந்த விழா. வாழ்க்கைநெறிகள் பல வழக்கொழிந்து போனதால் வாழ்த்துக்களை மட்டுமே இங்கு பரிமாறுகின்றேன்...

"அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்"...