Saturday, August 27, 2011

பொங்கலே தமிழர்க்குப் புத்தாண்டு

நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு.
அண்டிப் பிழைக்கவந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்.
தரணி ஆண்ட தமிழனுக்குத் தை முதல்நாளே புத்தாண்டு.


- பாவேந்தர் பாரதிதாசன்

Saturday, August 13, 2011

விடுதலை நாள் வாழ்த்துக்கள்



வெள்ளையனை விரட்டியடிக்க மட்டுமே இந்தக்கருப்பன் தேவைப்பட்டான்.
போர்க்களத்தில் அருகில் நிறுத்தப்பட்டவன், விடுதலைக்குப்பின் வெகுதூரம் வீசிஎரியப்பட்டன்.
சாமியால் தாழ்த்தப்பட்டான், சாதியால் குலத்தொழில் செய்யப்பணிக்கப்பட்டான்.

ஆனால் பெண்ணுக்கு  மட்டும் இந்நிலை இல்லை.
நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு, அன்பு என இவையனைத்தும் அவள் வடிவே எனப்பட்டாள், இறுதியில் எவ்விதச் சாதிவேறுபாடுகளும் இன்றிச் சமைத்தலுக்கும், சட்டிகழுவுதலுக்கும் அவளே வடிவானாள் கருப்பனின் வீட்டிலும். பெண் என்பவள் எந்தச்சாதியில் பிறந்திருந்தாலும் தாழ்த்தப்பட்டவளாகவே வைக்கப்படுகிறாள்.

அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துக்கள்.

Thursday, August 11, 2011

ஓவியர் புகழேந்தி

ஓவியர் புகழேந்தியார் அவர்கள்தம் வலைத்தளம்.
தந்தை பெரியார் மற்றும் ஈழம் தொடர்பான ஓவியங்கள் உள்ளன.

Wednesday, August 3, 2011

உடைத்தெறி என்னை

கால் நூற்றாண்டு காலக் கூச்சமானாலும் - அந்நிலை இப்பொழுதில்லை;
எதற்கிடத்தும் மருகுவேன் - அது என் காதலுக்கில்லை;
"பிறகு எதற்கு இந்த அமைதி?" என்று நீ கேட்பதாய் உணர்கிறேன்;
என் செய்வேன்? நீ அமைதியற்று அலைகிறாயே, அந்நிலை உணர்ந்தே;

ஒருவேளை என்னை உடைத்தெறிய நீ மீண்டு வருவாயோ?
இல்லை மென்மேலும் அமைதியற்று அலைவாயோ?
அதன்போது என்னை வெறுத்தே விடுவாயோ?

என் கூச்சத்தோடு உன் குழப்பமும் சேர்ந்துகொள்ள
நான் நீயாகிப்போனேன், அமைதியற்று அலைகிறேன்.